بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَمِنَ ٱلنَّاسِ مَن يَعۡبُدُ ٱللَّهَ عَلَىٰ حَرۡفٖۖ فَإِنۡ أَصَابَهُۥ خَيۡرٌ ٱطۡمَأَنَّ بِهِۦۖ وَإِنۡ أَصَابَتۡهُ فِتۡنَةٌ ٱنقَلَبَ عَلَىٰ وَجۡهِهِۦ خَسِرَ ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡخُسۡرَانُ ٱلۡمُبِينُ
இன்னும், சந்தேகத்துடன் அல்லாஹ்வை வணங்குபவரும் மக்களில் இருக்கிறார். ஆக, அவருக்கு செல்வம் கிடைத்தால் அதனால் அவர் திருப்தியடைகிறார். இன்னும், அவருக்கு சோதனை ஏற்பட்டால் தனது (நிராகரிப்பின்) முகத்தின் மீதே அவர் திரும்பி விடுகிறார். அவர் இவ்வுலகிலும் மறு உலகிலும் நஷ்டமடைந்து விட்டார். இதுதான் தெளிவான (பெரிய) நஷ்டமாகும்.
يَدۡعُواْ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُۥ وَمَا لَا يَنفَعُهُۥۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَٰلُ ٱلۡبَعِيدُ
அவர் (இஸ்லாமை விட்டு வெளியேறி விடுகிறார். இன்னும், அவரோ) அல்லாஹ்வை அழைக்காமல், தனக்கு தீங்கிழைக்காததை, தனக்கு நன்மை செய்யாததை (-சிலைகளை) அழைக்கிறார். இதுதான் மிக தூரமான வழிகேடாகும்.
يَدۡعُواْ لَمَن ضَرُّهُۥٓ أَقۡرَبُ مِن نَّفۡعِهِۦۚ لَبِئۡسَ ٱلۡمَوۡلَىٰ وَلَبِئۡسَ ٱلۡعَشِيرُ
யாருடைய நன்மையைவிட அவருடைய தீமைதான் மிக சமீபமாக இருக்கிறதோ அவரைத்தான் அவர் அழைக்கிறார். (சிலைகளை வணங்கக்கூடிய) அவர் (நம்பிக்கையாளருக்கு கொள்கையால்) நிச்சயமாக கெட்ட உறவினர் ஆவார். இன்னும், அவர் நிச்சயமாக கெட்ட தோழர் ஆவார்.
إِنَّ ٱللَّهَ يُدۡخِلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ جَنَّـٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ إِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يُرِيدُ
நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நன்மைகள் செய்தவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதை செய்கிறான்.
مَن كَانَ يَظُنُّ أَن لَّن يَنصُرَهُ ٱللَّهُ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ فَلۡيَمۡدُدۡ بِسَبَبٍ إِلَى ٱلسَّمَآءِ ثُمَّ لۡيَقۡطَعۡ فَلۡيَنظُرۡ هَلۡ يُذۡهِبَنَّ كَيۡدُهُۥ مَا يَغِيظُ
அல்லாஹ், அவருக்கு (-நபிக்கு) இவ்வுலகிலும் மறு உலகிலும் உதவவே மாட்டான் என்று யார் எண்ணி இருக்கிறானோ அவன் (வீட்டின்) முகட்டில் ஒரு கயிறை தொங்கவிட்டு பிறகு (அதை) துண்டித்து (-தூக்கிட்டு)க் கொள்ளவும். ஆக, (அவனை) எது கோபமூட்டுகிறதோ அதை அவனுடைய (இந்த தூக்கிட்டுக் கொள்ளும்) சூழ்ச்சி நிச்சயமாக போக்கி விடுகிறதா என்று அவன் கவனிக்கட்டும்.
وَكَذَٰلِكَ أَنزَلۡنَٰهُ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ وَأَنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يُرِيدُ
இன்னும், (-நமது வல்லமையை மறுத்தவருக்கு நமது அத்தாட்சிகளை விவரித்த) இவ்வாறே இ(ந்த வேதத்)தை (நமது வல்லமையை விவரிக்கிற) தெளிவான அத்தாட்சிகளாக நாம் (நபி முஹம்மதுக்கு) இறக்கினோம். மேலும், நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவருக்கு நேர்வழி காட்டுகிறான் (என்பதற்காகவும் அல்லாஹ் இந்த குர்ஆனை இறக்கினான்).
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلصَّـٰبِـِٔينَ وَٱلنَّصَٰرَىٰ وَٱلۡمَجُوسَ وَٱلَّذِينَ أَشۡرَكُوٓاْ إِنَّ ٱللَّهَ يَفۡصِلُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ
நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள், கிறித்தவர்கள், ஸாபியீன்கள், யூதர்கள், மஜூஸிகள் இன்னும், இணைவைத்தவர்கள் (ஆகிய) இவர்களுக்கு மத்தியில் மறுமைநாளில் நிச்சயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இவர்களின் செயல்கள்) எல்லாவற்றின் மீதும் சாட்சியாளன் ஆவான். (அவனுக்கு எதுவும் மறைந்ததல்ல).
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يَسۡجُدُۤ لَهُۥۤ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِ وَٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ وَٱلنُّجُومُ وَٱلۡجِبَالُ وَٱلشَّجَرُ وَٱلدَّوَآبُّ وَكَثِيرٞ مِّنَ ٱلنَّاسِۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيۡهِ ٱلۡعَذَابُۗ وَمَن يُهِنِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّكۡرِمٍۚ إِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يَشَآءُ۩
(நபியே!) நீர் பார்க்கவில்லையா, நிச்சயமாக அல்லாஹ், வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் மலைகளும் மரங்களும் கால்நடைகளும் மக்களில் அதிகமானவர்களும் அவனுக்குத்தான் சிரம் பணிகிறார்கள். இன்னும், பலர் (அல்லாஹ்விற்கு சிரம் பணிவதில்லை. ஆகவே) அவர்களுக்கு தண்டனை உறுதியாகி விட்டது. இன்னும், எவரை அல்லாஹ் இழிவுபடுத்தினானோ அவரை கண்ணியப்படுத்துபவர் எவரும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதை செய்வான்.
۞هَٰذَانِ خَصۡمَانِ ٱخۡتَصَمُواْ فِي رَبِّهِمۡۖ فَٱلَّذِينَ كَفَرُواْ قُطِّعَتۡ لَهُمۡ ثِيَابٞ مِّن نَّارٖ يُصَبُّ مِن فَوۡقِ رُءُوسِهِمُ ٱلۡحَمِيمُ
(அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர், இன்னும், அவனை நிராகரித்தவர் ஆகிய) இவ்விருவரும் தங்கள் இறைவனின் விஷயத்தில் தர்க்கிக்கிறார்கள். ஆக, எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்பில் (பழுக்க சூடுகாட்டப்பட்ட செம்பிலிருந்து) ஆடைகள் செய்யப்படும். அவர்களின் தலைகளுக்கு மேலிருந்து கடுமையாக கொதிக்கின்ற சுடு நீர் ஊற்றப்படும்.
يُصۡهَرُ بِهِۦ مَا فِي بُطُونِهِمۡ وَٱلۡجُلُودُ
அதன் மூலம் அவர்களுடைய வயிறுகளில் உள்ளவை (எல்லாம்) உருக்கப்பட்டு விடும். இன்னும், (அவர்களுடைய) தோல்களும் (உருகி விடும்).