بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَلَهُم مَّقَٰمِعُ مِنۡ حَدِيدٖ
அவர்களுக்கு இரும்பு சம்மட்டிகள் (உடைய அடிகள்) உண்டு.
كُلَّمَآ أَرَادُوٓاْ أَن يَخۡرُجُواْ مِنۡهَا مِنۡ غَمٍّ أُعِيدُواْ فِيهَا وَذُوقُواْ عَذَابَ ٱلۡحَرِيقِ
(அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தின்) துக்கத்தினால் அ(ந்த நரகத்)திலிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு நாடும்போதெல்லாம் அ(ந்த நரகத்)திலேயே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். இன்னும், (அவர்களை நோக்கி கூறப்படும்:) பொசுக்கக்கூடிய தண்டனையை சுவையுங்கள்.
إِنَّ ٱللَّهَ يُدۡخِلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ جَنَّـٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَلُؤۡلُؤٗاۖ وَلِبَاسُهُمۡ فِيهَا حَرِيرٞ
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகள் செய்தார்களோ அவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் தங்கத்தினாலான வளையல்களும் முத்து (ஆபரணமு)ம் அவர்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும், அவற்றில் அவர்களது ஆடை பட்டாக இருக்கும்.
وَهُدُوٓاْ إِلَى ٱلطَّيِّبِ مِنَ ٱلۡقَوۡلِ وَهُدُوٓاْ إِلَىٰ صِرَٰطِ ٱلۡحَمِيدِ
இன்னும், அவர்கள் (இவ்வுலகில்) நல்ல பேச்சிற்கு வழிகாட்டப்பட்டார்கள். இன்னும், புகழுக்குரியவனின் பாதை(யாகிய இஸ்லாமு)க்கு வழிகாட்டப்பட்டார்கள்.
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ ٱلَّذِي جَعَلۡنَٰهُ لِلنَّاسِ سَوَآءً ٱلۡعَٰكِفُ فِيهِ وَٱلۡبَادِۚ وَمَن يُرِدۡ فِيهِ بِإِلۡحَادِۭ بِظُلۡمٖ نُّذِقۡهُ مِنۡ عَذَابٍ أَلِيمٖ
நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும், அல்லாஹ்வின் பாதையிலிருந்தும் (-அவனது மார்க்கத்திலிருந்தும்) அல்மஸ்ஜிதுல் ஹராம் புனித பள்ளிவாசலிலிருந்தும் (முஃமின்களை) தடுக்கிறார்களோ (அவர்களுக்குக் கடுமையான தண்டனையை சுவைக்க வைப்போம்). அது, (-அல்மஸ்ஜிதுல் ஹராம்) அதில் தங்கி இருப்பவருக்கும் வெளியிலிருந்து வருபவருக்கும் பொதுவான (மஸ்ஜி)தாகும். எவர் அ(ந்த மஸ்ஜி)தில் அநியாயமாக பாவம் செய்ய நாடுவாரோ, துன்புறுத்துகின்ற தண்டனையை நாம் அவருக்கு சுவைக்க செய்வோம்.
وَإِذۡ بَوَّأۡنَا لِإِبۡرَٰهِيمَ مَكَانَ ٱلۡبَيۡتِ أَن لَّا تُشۡرِكۡ بِي شَيۡـٔٗا وَطَهِّرۡ بَيۡتِيَ لِلطَّآئِفِينَ وَٱلۡقَآئِمِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ
இன்னும், (நபியே!) இப்ராஹீமுக்கு (கஅபாவாகிய எனது) ஆலயத்தின் இடத்தை நாம் (காண்பித்து கொடுத்து அதில் ஆலயத்தை புதிதாக கட்டி எழுப்ப) அமைத்து கொடுத்த சமயத்தை நினைவு கூர்வீராக! (இப்ராஹீமே!) நீர் எனக்கு எதையும் இணைவைத்து வணங்காதீர்! மேலும், எனது வீட்டை (அதை) தவாஃப் செய்பவர்களுக்காகவும் தொழுகையில் நிற்பவர்களுக்காகவும், குனிபவர்களுக்காகவும், சிரம் பணிபவர்களுக்காகவும் (சிலைகளை விட்டும்) சுத்தமாக வைத்திருப்பீராக!
وَأَذِّن فِي ٱلنَّاسِ بِٱلۡحَجِّ يَأۡتُوكَ رِجَالٗا وَعَلَىٰ كُلِّ ضَامِرٖ يَأۡتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٖ
இன்னும், ஹஜ்ஜுக்காக மக்களுக்கு (மத்தியில்) அறிவிப்(புச் செய்து அவர்களை அழைப்)பீராக! அவர்கள் நடந்தவர்களாக உம்மிடம் வருவார்கள். இன்னும் தூரமான பாதைகளிலிருந்து வருகின்ற மெலிந்த எல்லா (வகையான) வாகனத்தின் மீது (வாகனித்தவர்களாகவும் வருவார்கள்).
لِّيَشۡهَدُواْ مَنَٰفِعَ لَهُمۡ وَيَذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ فِيٓ أَيَّامٖ مَّعۡلُومَٰتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلۡأَنۡعَٰمِۖ فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡبَآئِسَ ٱلۡفَقِيرَ
அவர்கள் தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும், (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்த கால்நடை பிராணிகள் மீது குறிப்பிட்ட (அந்த ஹஜ்ஜுடைய) நாட்களில் (அவற்றை அறுக்கும் போது) அல்லாஹ்வுடைய பெயரை நினைவு கூர்வதற்காகவும் (அவர்களை ஹஜ்ஜுக்கு அழைப்பீராக!) ஆக, (அல்லாஹ்விற்காக அறுக்கப்பட்ட) அவற்றிலிருந்து புசியுங்கள். இன்னும், வறியவருக்கும் ஏழைக்கும் (அவற்றிலிருந்து) உணவளியுங்கள்.
ثُمَّ لۡيَقۡضُواْ تَفَثَهُمۡ وَلۡيُوفُواْ نُذُورَهُمۡ وَلۡيَطَّوَّفُواْ بِٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ
பிறகு, அவர்கள் தங்களது (உடல்களில் இருந்து) அழுக்குகளை நீக்கிக் கொள்ளட்டும். இன்னும், தங்களது நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளட்டும். இன்னும், மிகப் பழமையான இறையாலத்தை அவர்கள் தவாஃப் செய்யட்டும்.
ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ حُرُمَٰتِ ٱللَّهِ فَهُوَ خَيۡرٞ لَّهُۥ عِندَ رَبِّهِۦۗ وَأُحِلَّتۡ لَكُمُ ٱلۡأَنۡعَٰمُ إِلَّا مَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡۖ فَٱجۡتَنِبُواْ ٱلرِّجۡسَ مِنَ ٱلۡأَوۡثَٰنِ وَٱجۡتَنِبُواْ قَوۡلَ ٱلزُّورِ
அவை உங்கள் மீது கடமையாகும். எவர் அல்லாஹ்வுடைய புனிதங்களை (-மக்கா, ஹஜ், உம்ரா இன்னும், அவற்றில் பேணவேண்டிய சட்டங்களை) மதிப்பாரோ அது அவருக்கு அவருடைய இறைவனிடம் மிகச் சிறந்ததாகும். இன்னும், உங்களுக்கு கால்நடைகள் ஆகுமாக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு (இந்தக் குர்ஆனில் ஐந்தாவது அத்தியாயத்தில் மூன்றாவது வசனத்தில் விளக்கமாக) ஓதிக்காட்டப்படுவதைத் தவிர. (அவை உங்களுக்கு தடுக்கப்பட்டவையாகும்.) சிலைகள் எனும் அசுத்தத்தை விட்டு விலகி இருங்கள். இன்னும், பொய்யான பேச்சை விட்டு விலகி இருங்கள்.