بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
قَدۡ سَمِعَ ٱللَّهُ قَوۡلَ ٱلَّتِي تُجَٰدِلُكَ فِي زَوۡجِهَا وَتَشۡتَكِيٓ إِلَى ٱللَّهِ وَٱللَّهُ يَسۡمَعُ تَحَاوُرَكُمَآۚ إِنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٌ
வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வை துதித்து தொழுகிறார்கள். அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
ٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِنكُم مِّن نِّسَآئِهِم مَّا هُنَّ أُمَّهَٰتِهِمۡۖ إِنۡ أُمَّهَٰتُهُمۡ إِلَّا ٱلَّـٰٓـِٔي وَلَدۡنَهُمۡۚ وَإِنَّهُمۡ لَيَقُولُونَ مُنكَرٗا مِّنَ ٱلۡقَوۡلِ وَزُورٗاۚ وَإِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٞ
உங்களில் எவர்கள் தங்கள் மனைவிகளிடம் ளிஹார் செய்கிறார்களோ அந்த பெண்கள் அவர்களின் தாய்மார்களாக ஆகமுடியாது. அவர்களின் தாய்மார்களாக இல்லை அவர்களை எவர்கள் பெற்றெடுத்தார்களோ அவர்களைத் தவிர. (ளிஹார் செய்வதன் மூலமாக) நிச்சயமாக அவர்கள் பேச்சில் மிகத் கெட்டதையும் (மார்க்க சட்டத்தில் அறியப்படாததையும்) பொய்யானதையும் கூறுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பிழை பொறுப்பவன், மகா மன்னிப்பாளன் ஆவான்.
وَٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِن نِّسَآئِهِمۡ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُواْ فَتَحۡرِيرُ رَقَبَةٖ مِّن قَبۡلِ أَن يَتَمَآسَّاۚ ذَٰلِكُمۡ تُوعَظُونَ بِهِۦۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ
இன்னும், எவர்கள் தங்கள் மனைவிகளிடம் ளிஹார் செய்து, பிறகு தாங்கள் கூறியதற்கு (-தங்கள் அந்த தவறை திருத்திக்கொள்வதற்கு) மீளுகிறார்களோ அவர்கள் (-ளிஹார் செய்த அந்த கணவனும் அவருடைய மனைவியும் இல்லற உறவில்) சேர்வதற்கு முன்னர் ஓர் அடிமையை உரிமையிட வேண்டும். இதுதான் (அல்லாஹ்வின் சட்டம்), நீங்கள் அ(தை செய்வ)தற்கு உபதேசிக்கப்படுகிறீர்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ شَهۡرَيۡنِ مُتَتَابِعَيۡنِ مِن قَبۡلِ أَن يَتَمَآسَّاۖ فَمَن لَّمۡ يَسۡتَطِعۡ فَإِطۡعَامُ سِتِّينَ مِسۡكِينٗاۚ ذَٰلِكَ لِتُؤۡمِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦۚ وَتِلۡكَ حُدُودُ ٱللَّهِۗ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٌ
ஆக, எவர் (அடிமையை உரிமையிட) வசதி பெறவில்லையோ அவர் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும் (ளிஹார் செய்த அந்த கணவனும் அவரது மனைவியும் இல்லற வாழ்க்கையில்) சேர்வதற்கு முன்னர். ஆக, எவர் (இதற்கு) சக்தி பெறவில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இது ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்கிறீர்கள் என்பதற்காக ஆகும். இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். இன்னும், துன்புறுத்தும் தண்டனை நிராகரிப்பாளர்களுக்கு உண்டு.
إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ كُبِتُواْ كَمَا كُبِتَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ وَقَدۡ أَنزَلۡنَآ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖۚ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٞ مُّهِينٞ
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முரண்படுகிறார்களோ (மாறுசெய்கிறார்களோ, அவர்களின் சட்டங்களை எதிர்க்கிறார்களோ) அவர்கள், அவர்களுக்கு முன்னுள்ளவர்கள் இழிவுபடுத்தப்பட்டது போன்று இழிவு படுத்தப்படுவார்கள். இன்னும், திட்டமாக நாம் தெளிவான அத்தாட்சிகளை இறக்கினோம். இழிவுதரும் தண்டனை நிராகரிப்பாளர்களுக்கு உண்டு.
يَوۡمَ يَبۡعَثُهُمُ ٱللَّهُ جَمِيعٗا فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوٓاْۚ أَحۡصَىٰهُ ٱللَّهُ وَنَسُوهُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ
அல்லாஹ் அவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற நாளில் (அந்த தண்டனையை அவர்கள் அடைவார்கள்). ஆக, அவர்கள் செய்தவற்றை அவன் அவர்களுக்கு (அப்போது) அறிவிப்பான். அல்லாஹ் அவற்றை கணக்கிட்டு வைத்துள்ளான். அவர்கள் அவற்றை மறந்துவிட்டார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவன் (அவற்றுக்கு சாட்சியாளன்) ஆவான்.
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ مَا يَكُونُ مِن نَّجۡوَىٰ ثَلَٰثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمۡ وَلَا خَمۡسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمۡ وَلَآ أَدۡنَىٰ مِن ذَٰلِكَ وَلَآ أَكۡثَرَ إِلَّا هُوَ مَعَهُمۡ أَيۡنَ مَا كَانُواْۖ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا عَمِلُواْ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ
(நபியே!) நீர் அறியவில்லையா? “நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் நன்கறிவான்: என்று. மூன்று நபர்களின் உரையாடல் இருக்காது, அவன் அவர்களில் நான்காமவனாக இருந்தே தவிர. இன்னும், ஐந்து நபர்களின் உரையாடல் இருக்காது, அவன் அவர்களில் ஆறாவதாக இருந்தே தவிர. இன்னும், அதை விட குறைவாகவோ அதிகமாகவோ இருக்க மாட்டார்கள், அவன் அவர்களுடன் இருந்தே தவிர, அவர்கள் எங்கிருந்தாலும் சரியே! பிறகு, அவன் அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றை மறுமை நாளில் அறிவிப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.
أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ نُهُواْ عَنِ ٱلنَّجۡوَىٰ ثُمَّ يَعُودُونَ لِمَا نُهُواْ عَنۡهُ وَيَتَنَٰجَوۡنَ بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَمَعۡصِيَتِ ٱلرَّسُولِۖ وَإِذَا جَآءُوكَ حَيَّوۡكَ بِمَا لَمۡ يُحَيِّكَ بِهِ ٱللَّهُ وَيَقُولُونَ فِيٓ أَنفُسِهِمۡ لَوۡلَا يُعَذِّبُنَا ٱللَّهُ بِمَا نَقُولُۚ حَسۡبُهُمۡ جَهَنَّمُ يَصۡلَوۡنَهَاۖ فَبِئۡسَ ٱلۡمَصِيرُ
கூடிப் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (தடுக்கப்பட்ட) பிறகும், அவர்கள் எதிலிருந்து தடுக்கப்பட்டார்களோ அதற்கே அவர்கள் திரும்புகிறார்கள். இன்னும் அவர்கள் பாவத்தையும் எல்லை மீறுவதையும் தூதருக்கு மாறுசெய்வதையும் கூடிப் பேசுகிறார்கள். அவர்கள் உம்மிடம் வந்தால் அல்லாஹ் உமக்கு எதை முகமனாகக் கூறவில்லையோ அதை முகமனாகக் கூறுகிறார்கள். தங்கள் மனதிற்குள், “நாம் சொல்வதைக் கொண்டு அல்லாஹ் நம்மை தண்டனை செய்யாமல் இருக்க வேண்டுமே!” என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு நரகமே போதும். அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள். ஆக, மீளுமிடங்களில் அது மிகக் கெட்டதாகும்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا تَنَٰجَيۡتُمۡ فَلَا تَتَنَٰجَوۡاْ بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَمَعۡصِيَتِ ٱلرَّسُولِ وَتَنَٰجَوۡاْ بِٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூடிப்பேசினால் பாவ(மான காரிய)த்தையும் (மார்க்க சட்டங்களை) மீறுவதையும் தூதருக்கு மாறுசெய்வதையும் கூடிப்பேசாதீர்கள். இன்னும், நன்மையான விஷயத்தையும் இறையச்சம் மிகுந்த விஷயத்தையும் கூடிப் பேசுங்கள்! இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடம்தான் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
إِنَّمَا ٱلنَّجۡوَىٰ مِنَ ٱلشَّيۡطَٰنِ لِيَحۡزُنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَيۡسَ بِضَآرِّهِمۡ شَيۡـًٔا إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ
(சந்தேகத்திற்கிடமாக) கூடிப்பேசுவது ஷைத்தான் புறத்திலிருந்து (உங்களுக்கு) தூண்டப்படுகிறது, (ஏனெனில்,) நம்பிக்கை கொண்டவர்களை கவலைப்படுத்துவதற்காக. ஆனால், அது அவர்களுக்கு அறவே தீங்கு செய்வதாக இல்லை, அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல். இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும்.