بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَقُل لِّلۡمُؤۡمِنَٰتِ يَغۡضُضۡنَ مِنۡ أَبۡصَٰرِهِنَّ وَيَحۡفَظۡنَ فُرُوجَهُنَّ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنۡهَاۖ وَلۡيَضۡرِبۡنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّۖ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوۡ ءَابَآئِهِنَّ أَوۡ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ أَبۡنَآئِهِنَّ أَوۡ أَبۡنَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ إِخۡوَٰنِهِنَّ أَوۡ بَنِيٓ إِخۡوَٰنِهِنَّ أَوۡ بَنِيٓ أَخَوَٰتِهِنَّ أَوۡ نِسَآئِهِنَّ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُنَّ أَوِ ٱلتَّـٰبِعِينَ غَيۡرِ أُوْلِي ٱلۡإِرۡبَةِ مِنَ ٱلرِّجَالِ أَوِ ٱلطِّفۡلِ ٱلَّذِينَ لَمۡ يَظۡهَرُواْ عَلَىٰ عَوۡرَٰتِ ٱلنِّسَآءِۖ وَلَا يَضۡرِبۡنَ بِأَرۡجُلِهِنَّ لِيُعۡلَمَ مَا يُخۡفِينَ مِن زِينَتِهِنَّۚ وَتُوبُوٓاْ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلۡمُؤۡمِنُونَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ
இன்னும், (நபியே!) நம்பிக்கையாளர்களான பெண்களுக்கு கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளை தடுத்துக் கொள்ளட்டும்; இன்னும், தங்கள் மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும்; இன்னும், தங்கள் அலங்காரங்களை - அதிலிருந்து வெளியில் தெரிபவற்றைத் தவிர (மற்றதை) - வெளிப்படுத்த வேண்டாம்; இன்னும், அவர்கள் தங்கள் முந்தானைகளை தங்கள் (தலைகளுக்கு மேலிருந்து சட்டைகளின்) நெஞ்சுப் பகுதிகள் மீது போர்த்திக் கொள்ளட்டும்; இன்னும், தங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம், தங்கள் கணவர்களுக்கு; அல்லது, தங்கள் தந்தைகளுக்கு; அல்லது, தங்கள் கணவர்களின் தந்தைகளுக்கு; அல்லது, தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு; அல்லது, தங்கள் கணவர்களின் ஆண் பிள்ளைகளுக்கு; அல்லது, தங்கள் சகோதரர்களுக்கு; அல்லது, தங்கள் சகோதரர்களின் ஆண் பிள்ளைகளுக்கு; அல்லது, தங்கள் சகோதரிகளின் ஆண் பிள்ளைகளுக்கு; அல்லது, தங்கள் (முஸ்லிமான) பெண்களுக்கு; அல்லது, தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களுக்கு; அல்லது, ஆண்களில் (பெண்) ஆசையில்லாத பணியாளர்களுக்கு; அல்லது, பெண்களின் மறைவிடங்களை அறியாத சிறுவர்களுக்கு (ஆகிய இவர்களுக்கே)த் தவிர. (கணவனுக்கு மனைவியிடம் எந்த மறைவும் இல்லை. அவரைத் தவிர மேல் கூறப்பட்ட மற்றவர்களுக்கு முன் ஒரு பெண் தனது முகம், குடங்கை, கழுத்துப் பகுதி, பாதம், காதுகள் தெரியும்படி இருந்தால் அவள் மீது குற்றமில்லை.) தங்கள் அலங்காரங்களிலிருந்து அவர்கள் மறைப்பது (மற்றவர்களிடம்) அறியப்படுவதற்காக அவர்கள் தங்கள் கால்(களில் உள்ள சலங்கை கொலுசு)களை பூமியில் தட்டி நடக்கவேண்டாம். இன்னும், நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி திரும்பி விடுங்கள்.
وَأَنكِحُواْ ٱلۡأَيَٰمَىٰ مِنكُمۡ وَٱلصَّـٰلِحِينَ مِنۡ عِبَادِكُمۡ وَإِمَآئِكُمۡۚ إِن يَكُونُواْ فُقَرَآءَ يُغۡنِهِمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ
இன்னும், உங்களில் துணை இல்லாதவர்களுக்கும் (-மனைவி இல்லாத ஆண்களுக்கும், கணவன் இல்லாத பெண்களுக்கும்) உங்கள் ஆண் அடிமைகளிலும் உங்கள் பெண் அடிமைகளிலும் உள்ள (ஒழுக்கமான) நல்லவர்களுக்கும் நீங்கள் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் அவர்களை தனது அருளால் (அவர்களுக்கு செல்வத்தை கொடுத்து) நிறைவுறச் செய்வான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.
وَلۡيَسۡتَعۡفِفِ ٱلَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ يُغۡنِيَهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَٱلَّذِينَ يَبۡتَغُونَ ٱلۡكِتَٰبَ مِمَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡ فَكَاتِبُوهُمۡ إِنۡ عَلِمۡتُمۡ فِيهِمۡ خَيۡرٗاۖ وَءَاتُوهُم مِّن مَّالِ ٱللَّهِ ٱلَّذِيٓ ءَاتَىٰكُمۡۚ وَلَا تُكۡرِهُواْ فَتَيَٰتِكُمۡ عَلَى ٱلۡبِغَآءِ إِنۡ أَرَدۡنَ تَحَصُّنٗا لِّتَبۡتَغُواْ عَرَضَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَمَن يُكۡرِههُّنَّ فَإِنَّ ٱللَّهَ مِنۢ بَعۡدِ إِكۡرَٰهِهِنَّ غَفُورٞ رَّحِيمٞ
எவர்கள் திருமணத்திற்கு வசதி பெறவில்லையோ அவர்கள் அல்லாஹ் அவர்களை தன் அருளால் வசதியுள்ளவர்களாக ஆக்கும் வரை ஒழுக்கமாக இருக்கட்டும். இன்னும், உங்கள் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் உரிமைப் பத்திரம் எழுதி விடுதலை பெற எவர்கள் விரும்புகிறார்களோ அவர்களில் நீங்கள் நன்மையை (-நம்பிக்கையையும் நல்ல குணத்தையும்) அறிந்தால் அவர்களுக்கு உரிமைப் பத்திரம் எழுதிக் கொடுங்கள். இன்னும், (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு அல்லாஹ் கொடுத்த அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து அவர்களுக்கு கொடு(த்து அவர்கள் விடுதலை பெற உதவு)ங்கள். நீங்கள் உலக வாழ்க்கையின் செல்வத்தை சம்பாதிக்க விரும்பி உங்கள் அடிமை பெண்களை விபச்சாரத்தில் நிர்ப்பந்த(மாக ஈடு)படுத்தாதீர்கள், அந்த அடிமைப் பெண்கள் பத்தினித்தனத்தை விரும்பினால். இன்னும், யார் அந்த அடிமை பெண்களை (விபச்சாரம் செய்ய) நிர்ப்பந்திப்பாரோ நிச்சயமாக அல்லாஹ் அந்த அடிமை பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர் அவர்களை மன்னிப்பவன், (அவர்கள் மீது) கருணை காட்டுபவன் ஆவான்.
وَلَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكُمۡ ءَايَٰتٖ مُّبَيِّنَٰتٖ وَمَثَلٗا مِّنَ ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلِكُمۡ وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ
திட்டவட்டமாக உங்களுக்கு தெளிவான வசனங்களையும் உங்களுக்கு முன்னர் (வாழ்ந்து) சென்றவர்களின் உதாரணத்தையும் இறையச்சமுள்ளவர்களுக்கு உபதேசத்தையும் இறக்கி இருக்கிறோம்.
۞ٱللَّهُ نُورُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ مَثَلُ نُورِهِۦ كَمِشۡكَوٰةٖ فِيهَا مِصۡبَاحٌۖ ٱلۡمِصۡبَاحُ فِي زُجَاجَةٍۖ ٱلزُّجَاجَةُ كَأَنَّهَا كَوۡكَبٞ دُرِّيّٞ يُوقَدُ مِن شَجَرَةٖ مُّبَٰرَكَةٖ زَيۡتُونَةٖ لَّا شَرۡقِيَّةٖ وَلَا غَرۡبِيَّةٖ يَكَادُ زَيۡتُهَا يُضِيٓءُ وَلَوۡ لَمۡ تَمۡسَسۡهُ نَارٞۚ نُّورٌ عَلَىٰ نُورٖۚ يَهۡدِي ٱللَّهُ لِنُورِهِۦ مَن يَشَآءُۚ وَيَضۡرِبُ ٱللَّهُ ٱلۡأَمۡثَٰلَ لِلنَّاسِۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ
அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஒளி (நேர்வழிகாட்டி) ஆவான். (முஃமினுடைய உள்ளத்தில் உள்ள) அவனது (நேர்வழி மற்றும் குர்ஆனுடைய) ஒளியின் தன்மையாவது ஒரு மாடத்தைப் போன்றாகும். அதில் ஒரு விளக்கு உள்ளது. அந்த விளக்கு கண்ணாடியில் உள்ளது. அந்தக் கண்ணாடி மின்னக்கூடிய ஒரு நட்சத்திரத்தைப் போல் உள்ளது. (அந்த விளக்கு,) கிழக்கிலும் அல்லாத மேற்கிலும் அல்லாத (-சூரியன் உதிக்கும் போதும் அது மறையும் போதும் அதன் வெயில் படாத அளவிற்கு இலைகள் அடர்த்தியான) ஆலிவ் என்னும் பாக்கியமான மரத்தில் இருந்து (எடுக்கப்பட்ட எண்ணெயிலிருந்து) எரிக்கப்படுகிறது. அதன் எண்ணெய் ஒளிர ஆரம்பித்து விடுகிறது, அதன் மீது தீ படவில்லை என்றாலும் சரியே. (தீ பட்டால் அது) ஒளிக்கு மேல் ஒளியாக ஆகிவிடுகிறது. அல்லாஹ், தனது (இஸ்லாம் எனும்) ஒளியின் பக்கம் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான். இன்னும், மக்களுக்கு (அவர்கள் நேர்வழி பெறுவதற்காக பல) உதாரணங்களை அல்லாஹ் விவரிக்கிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
فِي بُيُوتٍ أَذِنَ ٱللَّهُ أَن تُرۡفَعَ وَيُذۡكَرَ فِيهَا ٱسۡمُهُۥ يُسَبِّحُ لَهُۥ فِيهَا بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ
(அந்த விளக்கு) இறை இல்லங்களில் எரிக்கப்படுகிறது. அவை உயர்த்தி கட்டப்படுவதற்கும் அவற்றில் அவனது பெயர் நினைவு கூறப்படுவதற்கும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமினான ஆண்கள்) அவனை துதித்து தொழுகிறார்கள்.
رِجَالٞ لَّا تُلۡهِيهِمۡ تِجَٰرَةٞ وَلَا بَيۡعٌ عَن ذِكۡرِ ٱللَّهِ وَإِقَامِ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءِ ٱلزَّكَوٰةِ يَخَافُونَ يَوۡمٗا تَتَقَلَّبُ فِيهِ ٱلۡقُلُوبُ وَٱلۡأَبۡصَٰرُ
(இறை இல்லங்களில் தொழுகின்ற) ஆண்கள் - வர்த்தகமோ விற்பனையோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை நிலை நிறுத்துவதை விட்டும் ஸகாத் கொடுப்பதை விட்டும் (இன்னும் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு மட்டும் தூய்மையாக செய்வதை விட்டும்) அவர்களை திசை திருப்பி விடாது. அவர்கள் ஒரு நாளை பயப்படுவார்கள். அதில் (-அந்நாளில்) உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறும்.
لِيَجۡزِيَهُمُ ٱللَّهُ أَحۡسَنَ مَا عَمِلُواْ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦۗ وَٱللَّهُ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ
(அவர்கள் அப்படி அமல் செய்தது ஏனெனில்,) அவர்கள் செய்த மிக அழகிய நன்மைகளுக்கு அல்லாஹ் கூலி வழங்குவதற்காகவும் தனது அருளிலிருந்து அவர்களுக்கு மேலும் அதிகப்படுத்துவதற்காகவும் ஆகும். அல்லாஹ் தான் நாடியவருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.
وَٱلَّذِينَ كَفَرُوٓاْ أَعۡمَٰلُهُمۡ كَسَرَابِۭ بِقِيعَةٖ يَحۡسَبُهُ ٱلظَّمۡـَٔانُ مَآءً حَتَّىٰٓ إِذَا جَآءَهُۥ لَمۡ يَجِدۡهُ شَيۡـٔٗا وَوَجَدَ ٱللَّهَ عِندَهُۥ فَوَفَّىٰهُ حِسَابَهُۥۗ وَٱللَّهُ سَرِيعُ ٱلۡحِسَابِ
நிராகரிப்பாளர்கள் - அவர்களுடைய செயல்கள் வெட்டவெளியில் இருக்கும் கானல் நீரைப் போலாகும். (தாகித்தவர்) அதை தண்ணீராக எண்ணுகிறார். இறுதியாக, அதனிடம் அவர் வந்தால் அதை அறவே (அங்கு) காணமாட்டார். இன்னும், அல்லாஹ்வைத்தான் அதனிடம் காண்பார். ஆக, அவன் அவருடைய கணக்கை அவருக்கு முழுமையாக நிறைவேற்றுவான். இன்னும், கேள்வி கணக்கு கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன்.
أَوۡ كَظُلُمَٰتٖ فِي بَحۡرٖ لُّجِّيّٖ يَغۡشَىٰهُ مَوۡجٞ مِّن فَوۡقِهِۦ مَوۡجٞ مِّن فَوۡقِهِۦ سَحَابٞۚ ظُلُمَٰتُۢ بَعۡضُهَا فَوۡقَ بَعۡضٍ إِذَآ أَخۡرَجَ يَدَهُۥ لَمۡ يَكَدۡ يَرَىٰهَاۗ وَمَن لَّمۡ يَجۡعَلِ ٱللَّهُ لَهُۥ نُورٗا فَمَا لَهُۥ مِن نُّورٍ
அல்லது, ஆழமான கடலில் உள்ள இருள்களைப் போலாகும் (அவர்களது செயல்கள்). அதை (-அந்த கடலை) அலைக்கு மேல் அலை சூழ்ந்திருக்க, அதற்கு மேல் மேகம் சூழ்ந்திருக்கிறது. (இப்படி) இருள்கள் -அவற்றில் சில, சிலவற்றுக்கு- மேலாக (-கடுமையாக) இருக்கிறது. அவன் தனது கையை வெளியே நீட்டினால் அதை அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு (நேர்வழி எனும்) ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவருக்கு எவ்வித ஒளியும் இல்லை.