بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِنَّمَا كَانَ قَوۡلَ ٱلۡمُؤۡمِنِينَ إِذَا دُعُوٓاْ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِيَحۡكُمَ بَيۡنَهُمۡ أَن يَقُولُواْ سَمِعۡنَا وَأَطَعۡنَاۚ وَأُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ
அவர்களுக்கு மத்தியில் தூதர் தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ் இன்னும் அவனது தூதர் பக்கம் நம்பிக்கையாளர்கள் அழைக்கப்பட்டால் அப்போது அந்த நம்பிக்கையாளர்களுடைய கூற்றாக இருப்பதெல்லாம், நாங்கள் செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்று அவர்கள் கூறுவதுதான். இன்னும், அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவர்.
وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَخۡشَ ٱللَّهَ وَيَتَّقۡهِ فَأُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡفَآئِزُونَ
யார் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிவாரோ; இன்னும், அல்லாஹ்வை பயப்படுவாரோ; இன்னும், அவனை அஞ்சி நடப்பாரோ அ(த்தகைய)வர்கள்தான் (சொர்க்கத்தின்) நற்பாக்கியம் பெற்றவர்கள்.
۞وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِنۡ أَمَرۡتَهُمۡ لَيَخۡرُجُنَّۖ قُل لَّا تُقۡسِمُواْۖ طَاعَةٞ مَّعۡرُوفَةٌۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ
அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தனர்: “நீர் அவர்களுக்கு கட்டளையிட்டால் நிச்சயமாக அவர்கள் (போருக்கு) புறப்பட்டு வருவார்கள்” என்று. (நபியே) கூறுவீராக: “நீங்கள் சத்தியமிடாதீர்கள். (உங்கள் கீழ்ப்படிதல் பொய் என்று) அறியப்பட்ட கீழ்ப்படிதலே.” நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
قُلۡ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَۖ فَإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا عَلَيۡهِ مَا حُمِّلَ وَعَلَيۡكُم مَّا حُمِّلۡتُمۡۖ وَإِن تُطِيعُوهُ تَهۡتَدُواْۚ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ
(நபியே!) கூறுவீராக: அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள். இன்னும், தூதருக்கு கீழ்ப்படியுங்கள். ஆக, நீங்கள் விலகிச் சென்றால் அவர் மீது கடமையெல்லாம் அவர் மீது சுமத்தப்பட்டதுதான் (-மார்க்கத்தை எடுத்துச் சொல்வதுதான்). உங்கள் மீது கடமையெல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்டதுதான் (-தூதருக்கு கீழ்ப்படிவதும் கட்டுப்படுவதும்தான்). இன்னும், நீங்கள் அவருக்கு கீழ்ப்படிந்தால் நீங்கள் நேர் வழிப் பெறுவீர்கள். இன்னும், தூதர் மீது கடமை இல்லை, (மார்க்கத்தை) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர.
وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ لَيَسۡتَخۡلِفَنَّهُمۡ فِي ٱلۡأَرۡضِ كَمَا ٱسۡتَخۡلَفَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ وَلَيُمَكِّنَنَّ لَهُمۡ دِينَهُمُ ٱلَّذِي ٱرۡتَضَىٰ لَهُمۡ وَلَيُبَدِّلَنَّهُم مِّنۢ بَعۡدِ خَوۡفِهِمۡ أَمۡنٗاۚ يَعۡبُدُونَنِي لَا يُشۡرِكُونَ بِي شَيۡـٔٗاۚ وَمَن كَفَرَ بَعۡدَ ذَٰلِكَ فَأُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ
உங்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்: அவர்களுக்கு முன்னுள்ளவர்களை (பூமியின்) ஆட்சியாளர்களாக ஆக்கியது போன்று இப்பூமியில் அவர்களை ஆட்சியாளர்களாக ஆக்குவான். இன்னும், அவர்களுக்காக அவன் திருப்தியடைந்த அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்கு பலப்படுத்தித் தருவான். அவர்களது பயத்திற்கு பின்னர் நிம்மதியை அவர்களுக்கு மாற்றித்தருவான். அவர்கள் என்னை வணங்குவார்கள், எனக்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள். இதற்குப் பின்னர் யார் நிராகரிப்பார்களோ அவர்கள்தான் பாவிகள்.
وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ
இன்னும், நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத்தை கொடுங்கள். இன்னும் தூதருக்கு கீழ்ப்படியுங்கள்.
لَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مُعۡجِزِينَ فِي ٱلۡأَرۡضِۚ وَمَأۡوَىٰهُمُ ٱلنَّارُۖ وَلَبِئۡسَ ٱلۡمَصِيرُ
(நபியே!) நிராகரிப்பாளர்கள் இப்பூமியில் (அல்லாஹ்வை) பலவீனப்படுத்தி விடுவார்கள் என்று எண்ணி விடாதீர். இன்னும், அவர்களது தங்குமிடம் நரகம்தான். அது கெட்ட மீளுமிடமாகும்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لِيَسۡتَـٔۡذِنكُمُ ٱلَّذِينَ مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡ وَٱلَّذِينَ لَمۡ يَبۡلُغُواْ ٱلۡحُلُمَ مِنكُمۡ ثَلَٰثَ مَرَّـٰتٖۚ مِّن قَبۡلِ صَلَوٰةِ ٱلۡفَجۡرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُم مِّنَ ٱلظَّهِيرَةِ وَمِنۢ بَعۡدِ صَلَوٰةِ ٱلۡعِشَآءِۚ ثَلَٰثُ عَوۡرَٰتٖ لَّكُمۡۚ لَيۡسَ عَلَيۡكُمۡ وَلَا عَلَيۡهِمۡ جُنَاحُۢ بَعۡدَهُنَّۚ طَوَّـٰفُونَ عَلَيۡكُم بَعۡضُكُمۡ عَلَىٰ بَعۡضٖۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلۡأٓيَٰتِۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ
நம்பிக்கையாளர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களும் உங்களில் பருவத்தை அடையாதவர்களும் மூன்று நேரங்களில் (உங்கள் இல்லங்களில் நுழைய) உங்களிடம் அனுமதி கோரட்டும். அதிகாலை தொழுகைக்கு முன்; இன்னும், மதியத்தில் (நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக) உங்கள் ஆடைகளை நீங்கள் களைந்துவிடும் நேரத்தில்; இன்னும், இஷா தொழுகைக்கு பின் இவை மூன்றும் உங்களுக்கு மறைவான நேரங்கள் ஆகும். (இந்த நேரங்களில் அவர்கள் உங்களிடம் அனுமதி பெற்று உள்ளே பிரவேசிக்கவும். மற்ற நேரங்களில் அனுமதியின்றி அவர்கள் நுழைவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை. உங்களில் சிலர் சிலரிடம் அதிகம் வந்துபோகக் கூடியவர்கள் ஆவார்கள். இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு வசனங்களை தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
وَإِذَا بَلَغَ ٱلۡأَطۡفَٰلُ مِنكُمُ ٱلۡحُلُمَ فَلۡيَسۡتَـٔۡذِنُواْ كَمَا ٱسۡتَـٔۡذَنَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ
உங்களில் குழந்தைக(ளாக இருப்பவர்க)ள் பருவத்தை அடைந்துவிட்டால் அவர்கள் (உங்கள் இல்லங்களில் நுழையும் போது) அனுமதி கோரட்டும் அவர்களுக்கு முன்னர் உள்ள (வயது வந்த)வர்கள் அனுமதி கோரியது போன்று. இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு தனது வசனங்களை தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
وَٱلۡقَوَٰعِدُ مِنَ ٱلنِّسَآءِ ٱلَّـٰتِي لَا يَرۡجُونَ نِكَاحٗا فَلَيۡسَ عَلَيۡهِنَّ جُنَاحٌ أَن يَضَعۡنَ ثِيَابَهُنَّ غَيۡرَ مُتَبَرِّجَٰتِۭ بِزِينَةٖۖ وَأَن يَسۡتَعۡفِفۡنَ خَيۡرٞ لَّهُنَّۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ
பெண்களில் திருமணத்தை ஆசைப்படாத வயது முதிர்ந்தவர்கள் (தங்களது பர்தாவின் மேல் உள்ள) அவர்களின் துப்பட்டாக்களை (அணியாமல்) கழட்டுவதில் அவர்கள் மீது குற்றமில்லை. அவர்கள் அலங்காரங்களுடன் வெளியே வராமல் இருக்க வேண்டும். இன்னும், அவர்கள் பேணுதலாக இரு(ந்து துப்பட்டாக்களை எல்லோர் முன்பும் அணிந்து இரு)ப்பதுதான் அவர்களுக்கு சிறந்ததாகும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.