بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
۞إِنَّ ٱللَّهَ ٱشۡتَرَىٰ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ أَنفُسَهُمۡ وَأَمۡوَٰلَهُم بِأَنَّ لَهُمُ ٱلۡجَنَّةَۚ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِ فَيَقۡتُلُونَ وَيُقۡتَلُونَۖ وَعۡدًا عَلَيۡهِ حَقّٗا فِي ٱلتَّوۡرَىٰةِ وَٱلۡإِنجِيلِ وَٱلۡقُرۡءَانِۚ وَمَنۡ أَوۡفَىٰ بِعَهۡدِهِۦ مِنَ ٱللَّهِۚ فَٱسۡتَبۡشِرُواْ بِبَيۡعِكُمُ ٱلَّذِي بَايَعۡتُم بِهِۦۚ وَذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ,
நிச்சயமாக அல்லாஹ், நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களுடைய உயிர்களையும் அவர்களுடைய செல்வங்களையும் நிச்சயம் அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்பதற்கு பகரமாக விலைக்கு வாங்கினான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; ஆக, அவர்கள் (எதிரிகளை) கொல்வார்கள்; இன்னும் (எதிரிகளால்) கொல்லப்படுவார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் அவன் மீது கடமையான வாக்குறுதியாக இது இருக்கிறது. இன்னும், அல்லாஹ்வைவிட தனது உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, எதற்குப் பகரமாக நீங்கள் (உங்களை) விற்றீர்களோ அந்த உங்கள் விற்பனையைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். இதுதான் மகத்தான வெற்றி!
ٱلتَّـٰٓئِبُونَ ٱلۡعَٰبِدُونَ ٱلۡحَٰمِدُونَ ٱلسَّـٰٓئِحُونَ ٱلرَّـٰكِعُونَ ٱلسَّـٰجِدُونَ ٱلۡأٓمِرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَٱلنَّاهُونَ عَنِ ٱلۡمُنكَرِ وَٱلۡحَٰفِظُونَ لِحُدُودِ ٱللَّهِۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ,
(சொர்க்க பாக்கியம் பெறுகின்ற அவர்கள் பாவத்திலிருந்து) திருந்தியவர்கள்; வணக்கசாலிகள்; அல்லாஹ்வை புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; (தொழுகையில் பணிவாக அல்லாஹ்விற்கு முன்) குனிபவர்கள், சிரம் பணிபவர்கள்; நன்மையை ஏவக் கூடியவர்கள்; இன்னும், பாவத்தை விட்டுத் தடுக்கக் கூடியவர்கள்; இன்னும், அல்லாஹ்வுடைய சட்டங்களைப் பாதுகாப்பவர்கள் ஆவார்கள். (இத்தகைய தன்மைகளை உடைய) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கத்தின்) நற்செய்தி கூறுவீராக!
مَا كَانَ لِلنَّبِيِّ وَٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَن يَسۡتَغۡفِرُواْ لِلۡمُشۡرِكِينَ وَلَوۡ كَانُوٓاْ أُوْلِي قُرۡبَىٰ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمۡ أَنَّهُمۡ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ,
நிச்சயமாக நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் தகுந்ததல்ல, இணைவைப்பவர்களுக்காக அவர்கள் பாவமன்னிப்பு கோருவது, அவர்கள் நரகவாசிகள் என்று அவர்களுக்கு தெளிவான பின்னர். அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் சரி.
وَمَا كَانَ ٱسۡتِغۡفَارُ إِبۡرَٰهِيمَ لِأَبِيهِ إِلَّا عَن مَّوۡعِدَةٖ وَعَدَهَآ إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥٓ أَنَّهُۥ عَدُوّٞ لِّلَّهِ تَبَرَّأَ مِنۡهُۚ إِنَّ إِبۡرَٰهِيمَ لَأَوَّـٰهٌ حَلِيمٞ,
(நபி) இப்ராஹீம் தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரியது, அவர் அவருக்கு வாக்களித்த வாக்குறுதியை முன்னிட்டே தவிர (வேறு காரணத்திற்காக) இருக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ்விற்கு அவர் எதிரி என அவருக்குத் தெளிவானபோது அவரிலிருந்து அவர் விலகிக்கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் அதிகம் பிரார்த்திப்பவர், பெரும் சகிப்பாளர்.
وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِلَّ قَوۡمَۢا بَعۡدَ إِذۡ هَدَىٰهُمۡ حَتَّىٰ يُبَيِّنَ لَهُم مَّا يَتَّقُونَۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ,
ஒரு கூட்டத்தினரை, அவர்களை அல்லாஹ் நேர்வழிப்படுத்திய பின்னர், அவர்கள் தவிர்ந்து விலகி இருக்க வேண்டியவற்றை அவன் அவர்களுக்கு விவரிக்கும் வரை அவர்களை அவன் வழிகெட்டவர்கள் என்று முடிவு செய்பவனாக இருக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
إِنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يُحۡيِۦ وَيُمِيتُۚ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ,
நிச்சயமாக அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது! இன்னும் அவனே உயிர்ப்பிக்கிறான்; இன்னும், மரணிக்கச் செய்கிறான். இன்னும், அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு பாதுகாவலர் எவரும் இல்லை; இன்னும், உதவியாளர் எவரும் இல்லை.
لَّقَد تَّابَ ٱللَّهُ عَلَى ٱلنَّبِيِّ وَٱلۡمُهَٰجِرِينَ وَٱلۡأَنصَارِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ فِي سَاعَةِ ٱلۡعُسۡرَةِ مِنۢ بَعۡدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٖ مِّنۡهُمۡ ثُمَّ تَابَ عَلَيۡهِمۡۚ إِنَّهُۥ بِهِمۡ رَءُوفٞ رَّحِيمٞ,
நபி; இன்னும், (தபூக் போருடைய) சிரமமான நேரத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள்; இன்னும், அன்ஸாரிகளை அல்லாஹ் திட்டவட்டமாக மன்னித்தான், (தோழர்களாகிய) அவர்களில் ஒரு பிரிவினரின் உள்ளங்கள் வழிதவற நெருங்கிய பின்னர். பிறகு, அவன் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிகவும் இரக்கமுள்ளவன், பெரும் கருணையாளன்.
وَعَلَى ٱلثَّلَٰثَةِ ٱلَّذِينَ خُلِّفُواْ حَتَّىٰٓ إِذَا ضَاقَتۡ عَلَيۡهِمُ ٱلۡأَرۡضُ بِمَا رَحُبَتۡ وَضَاقَتۡ عَلَيۡهِمۡ أَنفُسُهُمۡ وَظَنُّوٓاْ أَن لَّا مَلۡجَأَ مِنَ ٱللَّهِ إِلَّآ إِلَيۡهِ ثُمَّ تَابَ عَلَيۡهِمۡ لِيَتُوبُوٓاْۚ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ,
இன்னும், (மன்னிப்பு வழங்கப்படாமல்) பிற்படுத்தப்பட்ட மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்). இறுதியாக, பூமி விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு நெருக்கடியாக ஆகியது. இன்னும், அவர்கள் மீது அவர்களின் ஆன்மாக்கள் நெருக்கடியாக ஆகியது. இன்னும், அல்லாஹ்விடமிருந்து (தப்பித்து) ஒதுங்குமிடம் அவனிடமே தவிர (வேறு எங்கும்) அறவே இல்லை என அவர்கள் உறுதி(யாக அறிந்து) கொண்டனர். பிறகு, அவர்கள் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதற்காக அவர்களை அவன் மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் (அடியார்களின்) தவ்பாவை அங்கீகரிப்பவன், பெரும் கருணையாளன்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَكُونُواْ مَعَ ٱلصَّـٰدِقِينَ,
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்; இன்னும், உண்மையாளர்களுடன் இருங்கள்.
مَا كَانَ لِأَهۡلِ ٱلۡمَدِينَةِ وَمَنۡ حَوۡلَهُم مِّنَ ٱلۡأَعۡرَابِ أَن يَتَخَلَّفُواْ عَن رَّسُولِ ٱللَّهِ وَلَا يَرۡغَبُواْ بِأَنفُسِهِمۡ عَن نَّفۡسِهِۦۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ لَا يُصِيبُهُمۡ ظَمَأٞ وَلَا نَصَبٞ وَلَا مَخۡمَصَةٞ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا يَطَـُٔونَ مَوۡطِئٗا يَغِيظُ ٱلۡكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنۡ عَدُوّٖ نَّيۡلًا إِلَّا كُتِبَ لَهُم بِهِۦ عَمَلٞ صَٰلِحٌۚ إِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ,
மதீனாவாசிகள்; இன்னும், அவர்களைச் சுற்றி உள்ள கிராம அரபிகளுக்கு - அவர்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டு பின் தங்குவதும்; அவருடைய உயிரை விட தங்கள் உயிர்களை நேசிப்பதும் - ஆகுமானதல்ல. அதற்குக் காரணம், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு தாகமோ, களைப்போ, பசியோ எது ஏற்பட்டாலும்; இன்னும், நிராகரிப்பாளர்களைக் கோபமூட்டுகிற இடத்தை இவர்கள் மிதித்தாலும்; இன்னும், எதிரிகளிடமிருந்து துன்பத்தை அவர்கள் அடைந்தாலும், இவற்றிற்கு பதிலாக அவர்களுக்கு நன்மையான செயல்(கள்) எழுதப்படாமல் இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் நல்லறம்புரிபவர்களின் கூலியை வீணாக்க மாட்டான்.