بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
فَإِن تَابُواْ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ فَإِخۡوَٰنُكُمۡ فِي ٱلدِّينِۗ وَنُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ,
ஆக, அவர்கள் (தங்கள் குற்றங்களில் இருந்து) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம் திரும்பி மன்னிப்புக் கோரி) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தையும் கொடுத்தால் (அவர்கள்) மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள். (தங்களுக்கு விவரிக்கப்படுவதை) அறிந்து கொள்கின்ற மக்களுக்கு நாம் வசனங்களை (இந்த வேதத்தில்) விவரித்து கூறுகிறோம்.
وَإِن نَّكَثُوٓاْ أَيۡمَٰنَهُم مِّنۢ بَعۡدِ عَهۡدِهِمۡ وَطَعَنُواْ فِي دِينِكُمۡ فَقَٰتِلُوٓاْ أَئِمَّةَ ٱلۡكُفۡرِ إِنَّهُمۡ لَآ أَيۡمَٰنَ لَهُمۡ لَعَلَّهُمۡ يَنتَهُونَ,
இன்னும், அவர்கள் தங்கள் உடன்படிக்கைக்குப் பின்னர் தங்கள் சத்தியங்களை முறித்தால்: இன்னும், உங்கள் மார்க்கத்தில் குறை கூறி குத்திப் பேசினால், அவர்கள் (இக்குற்றத்திலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்புடைய (இத்தகைய) தலைவர்களிடம் போரிடுங்கள். நிச்சயமாக அவர்களுக்கு சத்தியங்கள் அறவே இல்லை. (இவர்கள் தங்கள் சத்தியங்களை மதித்து நடக்க மாட்டார்கள்.)
أَلَا تُقَٰتِلُونَ قَوۡمٗا نَّكَثُوٓاْ أَيۡمَٰنَهُمۡ وَهَمُّواْ بِإِخۡرَاجِ ٱلرَّسُولِ وَهُم بَدَءُوكُمۡ أَوَّلَ مَرَّةٍۚ أَتَخۡشَوۡنَهُمۡۚ فَٱللَّهُ أَحَقُّ أَن تَخۡشَوۡهُ إِن كُنتُم مُّؤۡمِنِينَ,
தங்கள் சத்தியங்களை முறித்து, தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றுவதற்கு முடிவெடுத்த மக்களிடம் நீங்கள் போர்புரிய மாட்டீர்களா? அவர்கள்தான் (கலகத்தை) உங்களிடம் முதல் முறையாக ஆரம்பித்தனர். நீங்கள் அவர்களைப் பயப்படுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்தான் நீங்கள் பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன் ஆவான்.
قَٰتِلُوهُمۡ يُعَذِّبۡهُمُ ٱللَّهُ بِأَيۡدِيكُمۡ وَيُخۡزِهِمۡ وَيَنصُرۡكُمۡ عَلَيۡهِمۡ وَيَشۡفِ صُدُورَ قَوۡمٖ مُّؤۡمِنِينَ,
அவர்களிடம் போரிடுங்கள். உங்கள் கரங்களால் அல்லாஹ் அவர்களை தண்டிப்பான்; இன்னும், அவர்களை இழிவுபடுத்துவான்; இன்னும், அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவுவான்; இன்னும், நம்பிக்கை கொண்ட மக்களின் நெஞ்சங்க(ளில் உள்ள மனக் காயங்க)ளை குணப்படுத்துவான்.
وَيُذۡهِبۡ غَيۡظَ قُلُوبِهِمۡۗ وَيَتُوبُ ٱللَّهُ عَلَىٰ مَن يَشَآءُۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ,
இன்னும், அவர்களுடைய உள்ளங்களின் கோபத்தைப் போக்குவான்; இன்னும், அல்லாஹ் (அவர்களில்) தான் நாடியவர்களை திருத்தி, (அவர்களை) மன்னிப்பான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
أَمۡ حَسِبۡتُمۡ أَن تُتۡرَكُواْ وَلَمَّا يَعۡلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَٰهَدُواْ مِنكُمۡ وَلَمۡ يَتَّخِذُواْ مِن دُونِ ٱللَّهِ وَلَا رَسُولِهِۦ وَلَا ٱلۡمُؤۡمِنِينَ وَلِيجَةٗۚ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ,
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் எவர்கள் (மனம் விரும்பி) போர்புரிந்தார்களோ அவர்களையும்; இன்னும், அல்லாஹ், அவனுடைய தூதர், இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகிய இவர்கள் அல்லாதவர்களை அந்தரங்க நண்பர்களாக எவர்கள் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்களோ அவர்களையும் அல்லாஹ் (வெளிப்படையாக) அறியாமல் இருக்கும் நிலையில், நீங்கள் (சோதிக்கப்படாமல்) விட்டுவிடப்படுவீர்கள் என்று எண்ணிக்கொண்டீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவன் ஆவான்.
مَا كَانَ لِلۡمُشۡرِكِينَ أَن يَعۡمُرُواْ مَسَٰجِدَ ٱللَّهِ شَٰهِدِينَ عَلَىٰٓ أَنفُسِهِم بِٱلۡكُفۡرِۚ أُوْلَـٰٓئِكَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ وَفِي ٱلنَّارِ هُمۡ خَٰلِدُونَ,
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பரிபாலிப்பதற்கு இணைவைப்பாளர்களுக்கு உரிமை இருக்கவில்லை. (அவர்களுடைய) நிராகரிப்பிற்கு அவர்களே சாட்சி கூறுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய (நற்)செயல்கள் (இவ்வுலகிலேயே) அழிந்துவிடும். இன்னும், (மறுமையில்) நரகத்திலே அவர்கள் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்.
إِنَّمَا يَعۡمُرُ مَسَٰجِدَ ٱللَّهِ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَلَمۡ يَخۡشَ إِلَّا ٱللَّهَۖ فَعَسَىٰٓ أُوْلَـٰٓئِكَ أَن يَكُونُواْ مِنَ ٱلۡمُهۡتَدِينَ,
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளை பராமரிப்ப(தற்கு தகுதி உள்ள)வர்கள் எல்லாம் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர (எவரையும்) பயப்படாதவர்கள்தான். இவர்கள்தான் நேர்வழி பெற்றவர்களில் இருப்பார்கள்.
۞أَجَعَلۡتُمۡ سِقَايَةَ ٱلۡحَآجِّ وَعِمَارَةَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ كَمَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَجَٰهَدَ فِي سَبِيلِ ٱللَّهِۚ لَا يَسۡتَوُۥنَ عِندَ ٱللَّهِۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّـٰلِمِينَ,
ஹஜ் செய்பவர்களுக்கு தண்ணீர் புகட்டுவதையும், புனித மஸ்ஜிதை பராமரிப்பதையும் - அல்லாஹ் இன்னும் இறுதி நாளை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் போர்புரிந்தவர் (உடைய செயலைப்) போன்று - நீங்கள் ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்விடம் (இவர்கள் இருவரும்) சமமாக மாட்டார்கள். அல்லாஹ், அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
ٱلَّذِينَ ءَامَنُواْ وَهَاجَرُواْ وَجَٰهَدُواْ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ أَعۡظَمُ دَرَجَةً عِندَ ٱللَّهِۚ وَأُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡفَآئِزُونَ,
எவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் சென்று, அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போர் புரிந்தார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மிக மகத்தானவர்கள் ஆவார்கள். இன்னும், இவர்கள்தான் (சொர்க்கத்தைக் கொண்டு) வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.