بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱتَّخَذُوٓاْ أَحۡبَارَهُمۡ وَرُهۡبَٰنَهُمۡ أَرۡبَابٗا مِّن دُونِ ٱللَّهِ وَٱلۡمَسِيحَ ٱبۡنَ مَرۡيَمَ وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُوٓاْ إِلَٰهٗا وَٰحِدٗاۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَۚ سُبۡحَٰنَهُۥ عَمَّا يُشۡرِكُونَ,
இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் அறிஞர்களையும் தங்கள் துறவிகளையும் மர்யமுடைய மகன் (ஈஸா) மஸீஹையும் கடவுள்களாக எடுத்துக் கொண்டனர். வணக்கத்திற்குரிய ஒரே ஓர் இறைவனை அவர்கள் வணங்குவதற்கே தவிர அவர்கள் ஏவப்படவில்லை. அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் மிகத் தூயவன்.
يُرِيدُونَ أَن يُطۡفِـُٔواْ نُورَ ٱللَّهِ بِأَفۡوَٰهِهِمۡ وَيَأۡبَى ٱللَّهُ إِلَّآ أَن يُتِمَّ نُورَهُۥ وَلَوۡ كَرِهَ ٱلۡكَٰفِرُونَ,
இவர்கள் தங்கள் வாய்களால் (ஊதி) அல்லாஹ்வுடைய ஒளியை அணைப்பதற்கு விரும்புகிறார்கள். நிராகரிப்பவர்கள் வெறுத்தாலும் அல்லாஹ் தன் ஒளியை முழுமைப்படுத்தியே தீருவான்.
هُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُشۡرِكُونَ,
அவன், தன் தூதரை நேர்வழியுடனும் உண்மையான மார்க்கத்துடனும் அனுப்பினான், - எல்லா மார்க்கங்களைப் பார்க்கிலும் அதை மேலோங்க வைப்பதற்காக. இணைவைப்பவர்கள் வெறுத்தாலும் சரியே!
۞يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ كَثِيرٗا مِّنَ ٱلۡأَحۡبَارِ وَٱلرُّهۡبَانِ لَيَأۡكُلُونَ أَمۡوَٰلَ ٱلنَّاسِ بِٱلۡبَٰطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِۗ وَٱلَّذِينَ يَكۡنِزُونَ ٱلذَّهَبَ وَٱلۡفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ ٱللَّهِ فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٖ,
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக யூத, கிறித்தவ அறிஞர்களில் இருந்தும் இன்னும் துறவிகளில் இருந்தும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறாக அனுபவிக்கிறார்கள். இன்னும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும், எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்துவிட்டு, அவற்றை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்ய மாட்டார்களோ, துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு என்று நற்செய்தி கூறுவீராக.
يَوۡمَ يُحۡمَىٰ عَلَيۡهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكۡوَىٰ بِهَا جِبَاهُهُمۡ وَجُنُوبُهُمۡ وَظُهُورُهُمۡۖ هَٰذَا مَا كَنَزۡتُمۡ لِأَنفُسِكُمۡ فَذُوقُواْ مَا كُنتُمۡ تَكۡنِزُونَ,
மறுமை நாளில், அவற்றை (-அந்த தங்கம் வெள்ளிகளை) நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்படும். ஆக, அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளுக்கும், அவர்களுடைய விலாக்களுக்கும், அவர்களுடைய முதுகுகளுக்கும் சூடு போடப்படும். “உங்களுக்காக நீங்கள் சேமித்தவைதான் இவை. ஆகவே, நீங்கள் சேமித்துக் கொண்டிருந்தவற்றை (-அவற்றுக்குரிய தண்டனையை இன்று) சுவையுங்கள்.” (என்று அவர்களுக்கு கூறப்படும்.)
إِنَّ عِدَّةَ ٱلشُّهُورِ عِندَ ٱللَّهِ ٱثۡنَا عَشَرَ شَهۡرٗا فِي كِتَٰبِ ٱللَّهِ يَوۡمَ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ مِنۡهَآ أَرۡبَعَةٌ حُرُمٞۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُۚ فَلَا تَظۡلِمُواْ فِيهِنَّ أَنفُسَكُمۡۚ وَقَٰتِلُواْ ٱلۡمُشۡرِكِينَ كَآفَّةٗ كَمَا يُقَٰتِلُونَكُمۡ كَآفَّةٗۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ,
நிச்சயமாக அல்லாஹ்விடம், வானங்களையும், பூமியையும் படைத்த நாளில், அல்லாஹ்வின் விதியில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் புனிதமான நான்கு மாதங்கள் உள்ளன. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, அவற்றில் (-அம்மாதங்களில் பாவம் செய்து) உங்களுக்கு தீங்கு இழைக்காதீர்கள். நீங்கள் ஒன்றிணைந்து இணைவைப்பவர்களிடம் போர் புரியுங்கள் அவர்கள் ஒன்றிணைந்து உங்களிடம் போர் புரிவது போன்று. நிச்சயமாக அல்லாஹ், தன்னை அஞ்சுபவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
إِنَّمَا ٱلنَّسِيٓءُ زِيَادَةٞ فِي ٱلۡكُفۡرِۖ يُضَلُّ بِهِ ٱلَّذِينَ كَفَرُواْ يُحِلُّونَهُۥ عَامٗا وَيُحَرِّمُونَهُۥ عَامٗا لِّيُوَاطِـُٔواْ عِدَّةَ مَا حَرَّمَ ٱللَّهُ فَيُحِلُّواْ مَا حَرَّمَ ٱللَّهُۚ زُيِّنَ لَهُمۡ سُوٓءُ أَعۡمَٰلِهِمۡۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ,
(புனித மாதங்களை அவற்றின் காலத்திலிருந்து) பிற்படுத்துவதெல்லாம் நிராகரிப்பில் அதிகப்படுத்துவதாகும். அதன்மூலம் நிராகரிப்பவர்கள் வழி கெடுக்கப்படுகிறார்கள். ஓர் ஆண்டில் (புனித மாதமாகிய) அதை ஆகுமாக்குகிறார்கள். இன்னும், (வேறு) ஓர் ஆண்டில் அதை (புனிதம் என) தடை செய்து கொள்கிறார்கள். காரணம், அல்லாஹ் தடை செய்த (புனித மாதங்களின்) எண்ணிக்கைக்கு அவர்கள் ஒத்துவந்து, பிறகு, அல்லாஹ் தடை செய்ததை அவர்கள் ஆகுமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதாகும். அவர்களுடைய தீயச் செயல்கள் அவர்களுக்கு அலங்கரிக்கப்பட்டன. இன்னும், அல்லாஹ் நிராகரிப்பாளர்களான மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ مَا لَكُمۡ إِذَا قِيلَ لَكُمُ ٱنفِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ٱثَّاقَلۡتُمۡ إِلَى ٱلۡأَرۡضِۚ أَرَضِيتُم بِٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا مِنَ ٱلۡأٓخِرَةِۚ فَمَا مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فِي ٱلۡأٓخِرَةِ إِلَّا قَلِيلٌ,
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்கு) புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் உங்களுக்கு என்ன ஆனது? உலகத்தின் பக்கம் சாய்ந்து விட்டீர்கள்! மறுமையை பார்க்கிலும் உலக வாழ்க்கையைக் கொண்டு திருப்தி அடைந்தீர்களா? உலக வாழ்க்கையின் இன்பம் மறுமையில் அற்பமானதாகவே தவிர இல்லை!
إِلَّا تَنفِرُواْ يُعَذِّبۡكُمۡ عَذَابًا أَلِيمٗا وَيَسۡتَبۡدِلۡ قَوۡمًا غَيۡرَكُمۡ وَلَا تَضُرُّوهُ شَيۡـٔٗاۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ,
(போருக்கு) நீங்கள் புறப்படாவிட்டால், துன்புறுத்தக்கூடிய தண்டனையால் அவன் உங்களை தண்டிப்பான்; இன்னும், உங்களை அன்றி (வேறு) ஒரு சமுதாயத்தை (தனது தீனுக்காக) மாற்றி விடுவான். நீங்கள் அவனுக்கு எதையும் தீங்கிழைக்க முடியாது. அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
إِلَّا تَنصُرُوهُ فَقَدۡ نَصَرَهُ ٱللَّهُ إِذۡ أَخۡرَجَهُ ٱلَّذِينَ كَفَرُواْ ثَانِيَ ٱثۡنَيۡنِ إِذۡ هُمَا فِي ٱلۡغَارِ إِذۡ يَقُولُ لِصَٰحِبِهِۦ لَا تَحۡزَنۡ إِنَّ ٱللَّهَ مَعَنَاۖ فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَيۡهِ وَأَيَّدَهُۥ بِجُنُودٖ لَّمۡ تَرَوۡهَا وَجَعَلَ كَلِمَةَ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلسُّفۡلَىٰۗ وَكَلِمَةُ ٱللَّهِ هِيَ ٱلۡعُلۡيَاۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ,
நீங்கள் அவருக்கு உதவவில்லையெனில் (அவருக்கு நஷ்டம் இல்லை). இருவரில் ஒருவராக அவர் இருக்கும் நிலையில் நிராகரித்தவர்கள் அவரை (ஊரை விட்டு) வெளியேற்றியபோது, அவ்விருவரும் குகையில் இருந்தபோது, தன் தோழரை நோக்கி, “நீ கவலைப்படாதே! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என்று கூறியபோது அல்லாஹ் அவருக்கு உதவி செய்துவிட்டான். ஆக, அல்லாஹ் அவர் மீது தன் அமைதியை இறக்கினான். இன்னும், நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். நிராகரித்தவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை, ஆற்றலை) மிகத் தாழ்ந்ததாக ஆக்கினான். அல்லாஹ்வின் வார்த்தைதான் (அவனது மார்க்கம், வலிமை) மிக உயர்வானது. அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.